img
img

110.7 மில்லியன் டாலருக்கு ஏலம் போன வைக்கோல் ஓவியம் 
சனி 18 மே 2019 13:26:55

img

நியூயார்க்,

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் கிளாட் மொணட் வரைந்த வைக்கோல் ஓவியம் 110.7 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு  ஏலம் போனது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் புகழ்பெற்ற ஓவியரான கிளாட் மொணட். அந்நாட்டின் நார்மண்டி பிராந்தியத்தில் வசித்து வந்த இவர் கடந்த 1890ஆம் ஆண்டு, கிராமப்புற வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் வைக்கோல் போரை ஓவியமாக தீட்டினார். 

கிளாட் மொணட் வரைந்த ஓவியங்களில் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இந்த ஓவியம் வெவ்வேறு நாடுகளில் ஏலத்தில் விடப்பட்டு, பல கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சோத்பி ஏல நிறுவனம் கிளாட் மொணட்டின் வைக்கோல் ஓவியத்தை அண்மையில் ஏலத்தில் விட்டது. 

ஏலம் தொடங்கிய 8 நிமிடங்களில் இந்த ஓவியம், 110.7 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு  ஏலம் போனது. இந்த ஓவியம் 100 மில்லியன் டாலருக்கு அதிகமாக ஏலம் போனது இதுவே முதல் முறையாகும். கிளாட் மொணட்டின் ஓவியங்களில் அதிக விலைக்கு விற்பனையான ஓவியம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img