img
img

ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு
வியாழன் 15 செப்டம்பர் 2022 15:59:47

img

லண்டன், செப். 10

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது எலிசபெத் அரசியார் தம் 96 ஆவது வயதில் நேற்று முன்தினம் காலமானார். இளவரசி எலிசபெத் அலெக்சாண்ட்ரா மேரி எனும் இவர், தம் தந்தை ஜார்ஜ் vi  காலமானதை அடுத்து 1952 பிப்ரவரி 6 ஆம் தேதி 25 வயதிலேயே ராணியாக முடி சூட்டப்பட்டார்.

இவர் ஆட்சி புரிந்த காலகட்டத்தில் சர் வின்ஸ்டன் சர்ச்சில் முதல் மிகவும் சமீபத்தில் லிஸ் டிரஸ் வரை 15 பிரிட்டிஷ் பிரதமர்கள் மற்றும் 14 அமெரிக்க அதிபர்கள் பதவி வகித்துள்ளனர். நேற்று முன்தினம், வியாழக்கிழமை ஆகக்கடைசியாக பிரிட்டனின் புதிய பிரதமரான லிஸ் டிரஸ் நியமனத்தை வழக்கத்திற்கு மாறாக தன் இல்லத்திலேயே எலிசபெத் அரசியார்  நடத்தினார். இதற்கு முன்னதாக அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் கலந்து கொள்வதை சுகாதார காரணங்களுக்காக அவர் தவிர்த்து வந்துள்ளார்.

அவர் மருத்துவர்களின் தீவிர கவனிப்பில் இருப்பதாக தகவல் வெளியானது முதல் உலக மக்களின் கவனம் முழுமையாக அவரைச் சூழ்ந்திருந்தது. எலிசபெத் அரசியாரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் அவரின் இல்லத்திற்கு விரைந்தனர். சில உலக தொலைக்காட்சி நிலையங்கள் இதனை நேரடி ஒளிபரப்பு செய்தன. மலேசிய நேரப்படி அதிகாலை 1.30 மணியளவில் அவரின் மரணச் செய்தி அறிவிக்கப்பட்டது.  இது பிரிஸ்டிஷ் நேரப்படி வியாழக்கிழமை மாலை 6.30 மணியாகும்.

அவரின் மரணச் செய்தி அறிந்து எலிசபெத் அரசியாரின் பால்மோரல் இல்லத்திற்கு வெளியிலும் பக்கிங்ஹாம் அரண்மனை, மற்ற அரச கட்டடங்கள், வாஷிங்டன், பெர்லின் உள்ளிட்ட பிரிட்டிஷ் தூதரகங்களுக்கு வெளியே ஆயிரக்கணக்கில்  மக்கள் குழுமியிருந்தனர். தங்கள் அன்பையும் அனுதாபத்தையும் வெளிப்படுத்தும் வகையில் மலர்க்கொத்துகள்  வைக்கப்பட்டிருந்தன.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எலிசபெத் அரசியாரின் கணவர், இளவரசர் ஃபிலிப் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவர் தனிமையில் இருந்த விண்ட்சர் கோட்டைக்கு வெளியிலும் மலர்க்கொத்துகளை மக்கள் வைத்துச் சென்றனர்.  
இதனிடையே, எலிசபெத் அரசியாரின் உடல் நிலை திடீரென மோசமானதை அடுத்து அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் இறுதி மூச்சு விட்டபோது அவரின் மூத்த புதல்வர் இளவரசர் சார்ல்ஸ் மற்றும் புதல்வி இளவரசி ஆன் ஆகியோர் அவருடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

ராணியின் பேரப்பிள்ளைகளான இளவரசர் அண்ட்ரூ, இளவரசர் எட்வர்ட், அவரின் மனைவி சோஃபி, இளவரசர் வில்லியம் ஆகியோர் பெர்க்ஷயரிலிருந்து தனியார் ஜெட் விமானத்தில் புறப்பட்டு, அபிர்டீன் வந்தடைந்து, அங்கிருந்து பால்மோரல் சென்றனர். ஆனாலும், அரசியார் இறப்பதற்கு முன்னதாக அவர்களால் அவரின் இல்லத்தைச் சென்றடைய முடியவில்லை என்று கூறப்படுகிறது.
எலிசபெத் அரசியாரின் மற்றொரு பேரப்பிள்ளையான இளவரசர் ஹெரி, லண்டனில் தன் மனைவி மேகனுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதை ரத்துச் செய்து விட்டு ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் இல்லத்திற்கு விரைந்தார். ஆனால் அவர் அங்கு சென்றடைந்தபோது அந்நாட்டு நேரப்படி இரவு 8.00 மணியாகும்.

ராணியின் மரணம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்ட சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகே ஹெரி அங்கு சென்றுள்ளார். அவர் விமானத்தில் நடுவானில் இருந்தபோது மக்களுக்கு  ராணியின் மரணம் குறித்து அறிவிக்கப்பட்டு விட்டது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img