img
img

வெனிசூலா நாட்டில் துணை சபாநாயகர் சிறையில் அடைப்பு 
திங்கள் 13 மே 2019 15:28:58

img

கராக்கஸ், 

வெனிசூலா நாட்டில் நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்து வந்த எட்கர் ஜாம்ப்ரனோ சிறையில் அடைக்கப்பட்டார். வெனிசூலா நாட்டில் அரசியல் குழப்பம் உள்ளது. அங்கு நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்து வந்த எட்கர் ஜாம்ப்ரனோ கைது செய்யப்பட்டார். அவரை உடனே விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ, வெனிசூலா அரசை வலியுறுத்தி உள்ளார். 

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட எட்கர் ஜாம்ப்ரனோ, கராக்கஸ் நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை சிறையில் அடைக்கு ம்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையொட்டி, நீதிமன்ற  தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், எட்கர் ஜாம்ப்ரனோ பயங்கரவாத குற்றச்சாட்டின்பேரில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. 

வெனிசூலாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் பிற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து எட்கர் ஜாம்ப்ரனோ செயல்பட்டார் என்பதுதான் குற்றச்சாட்டு. இது தொடர்பாகத்தான் விசாரணை நடத்தப்படுகிறது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img