img
img

உருளைக்கிழங்கில் இரட்டை படுக்கை கொண்ட தங்கும் விடுதி 
சனி 27 ஏப்ரல் 2019 16:24:56

img

நியூயார்க், 

அமெரிக்காவில் 2012ஆம் ஆண்டு மிகப் பெரிய உருளைக்கிழங்கு விளைவிக்கப்பட்டு தற்போது அது இரட்டைப் படுக்கை கொண்ட சிறிய தங்கும் விடு தியாக அமைக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தில் தலைநகர் போய்சில் உருளைக்கிழங்கு பயிரிடுவதை ஊக்குவிக்கும் விதமாக, கடந்த 2012ஆம் ஆண்டு மிகப் பெரிய உருளைக்கிழங்கு விளைவிக்கப்பட்டது.  

28 அடி நீளம் மற்றும் 12 அடி அகலத்தில் 6 டன் எடையுடன் விளைந்த இந்த உருளைக் கிழங்கு உலகிலேயே மிகப் பெரிய உருளைக்கிழங்காக அறி யப்பட்டது. அதன் பின்னர் மக்களின் பார்வைக்காக இந்த உருளைக்கிழங்கு ராட்சத லாரி மூலம் அமெரிக்கா முழுவதும் சுற்றிவந்தது. கடந்த ஆண்டு இறுதியில் இந்த சுற்றுப்பயணம் முடிந்தது. 

இந்த நிலையில், தற்போது இந்த உருளைக் கிழங்கு இரட்டை படுக்கை கொண்ட சிறிய தங்கும் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. உருளைக்கிழங்கை குடைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த தங்கும் விடுதியில், சொகுசு இருக்கைகள், படுக்கை, கழிவறை என அனைத்து வசதிகளும் உள்ளன. இது பார்வை யாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. இந்த விடுதியில் ஒரு நாள் தங்குவதற்கு 200 டாலர்  வசூலிக்கப்படுகிறது. அப்படி இருந்தும் மே மாதம் முழுவதும் இந்த விடுதி முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img