img
img

அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச படங்களை நீக்க பேஸ்புக் அதிரடி நடவடிக்கை 
திங்கள் 18 மார்ச் 2019 17:04:43

img

சான்பிரான்சிஸ்கோ, 

ஆபாச படங்களை நீக்க ஏ.ஐ. என்று அழைக்கப்படுகிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.  

பேஸ்புக்  சமூக வலைதளங்களில் சம்பந்தப்பட்ட நபர்களின் அனுமதியின்றி அவர்களது ஆபாச படங்கள், தகவல்கள், வீடியோக்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இவற்றையெல்லாம் அந்த சமூக வலைதளத்தில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இதற்காக ஏ.ஐ.  என்று அழைக்கப்படுகிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த பேஸ்புக் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. 

இதுபற்றி அந்த நிறுவனத்தின் உலக பாதுகாப்பு பிரிவின் தலைவர் ஆன்டிகான் டேவிஸ் கூறியதாவது:-பேஸ்புக் சமூக வலைதளத்தில் (சம்பந்தப்பட்ட வர்களின்) எந்தவித அனுமதியும் இன்றி ஆபாசப் படங்கள், வீடியோக்களை பகிர்ந்து கொள்கிறார்கள். இவற்றை நீக்குவதற்கு புதிய தொழில் நுட்பங்கள் உதவும். 

அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, எங்கள் வலைதளத்தில் பகிர்ந்து கொள்ளப்படுகிற ஆபாசப் படங்கள், வீடி யோக்கள் பற்றி புகார்கள் வருமுன்னரே மனித மதிப்பீட்டாளர்களின் மதிப்பீட்டுக்கு அனுப்பப்படும். யாரோ சிலரின் நெருக்கமான காட்சிகளைக் கொண்ட படங்களை வெளியிடுகிறபோது அது பேராபத்தை ஏற்படுத்தி விடுகிறது. எனவே அவற்றை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீக்குவோம். முதலில் இதை சோதனை ரீதியில் பயன்படுத்தி விட்டு, பின்னர் நெருக்கடி நேரத்தில் பயன்படுத்தத்தக்கதாக விரிவுபடுத்துவோம் எனக் கூறி உள்ளார். 



பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img