img
img

ஆரம்பமானது மூன்றாம் உலகப் போர்
வெள்ளி 21 அக்டோபர் 2016 14:13:02

img

நாடுகளுக்கிடையில் நல்லிணக்கம் என்பது மிக முக்கியமான ஒன்று, அது சிதைந்து விட்டால் உலகத்திற்கே மிகப்பெரிய ஆபத்தை விளைவித்துவிடும்.அதுவும் இரு வல்லரசு மிக்க நாடுகள் மோதிக் கொண்டால் அது சற்று பிரச்சனைக்குரிய விடயமே. அவ்வாறான ஓர் விடயம் தான் இன்று உலகத்தை உளுக்கிகொண்டு இருக்கின்றது.ரஷ்யாவின் 6 போர் கப்பல்கள் சிரியாவிற்கு அனுப்பபடுவதாக கூறி Scotland கடல் கரை ஓரமாக பயணித்துள்ளது.இதன்போது ரஷ்யாவின் நாசக்கார நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றும், 2 பாரிய போர் கப்பல்களும் மேலும் ஒரு விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் இரண்டு சிறிய ரக அதிவேக தாக்குதல் கப்பல்கள் அணிவகுத்து செல்வதை அவதானித்த பிரித்தானியா அதிர்ச்சிக்குள்ளாகியது. இதனை ராடர் திரையில் அவதானித்த பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சு உடனடியாக அதி நவீன நாசகார போர் கப்பலையும் (HMS -டங்கன்) மேலும் 6 கப்பல்களை அவ்விடம் நோக்கி அனுப்பியது.இதுவரை எச்.எம்.எஸ் டங்கன் எனும் அதி நவீன நாசகார கப்பலை பிரித்தானியா உலகிற்கு காட்டியதே இல்லை. இதை தொடர்ந்து பிரித்தானியாவுக்கு உதவும் பொருட்டு நோர்வே நாட்டின் 2 போர் கப்பல்கள் ரஷ்ய கப்பலை நோக்கி நகர, மேலும் 2 போர் கப்பல்களை பிரித்தானியா பிரான்ஸ் பக்கமாக இருந்து நகர்த்தியது.மொத்தமாக 8 பிரித்தானிய போர் கப்பல்கள் ரஷ்யாவின் 6 போர் கப்பலை நோக்கிச் செல்லும் நிலையில் ரஷ்ய விமானம் தாங்கிக் கப்பலில் இருந்த அதி நவீன தாக்குதல் ஹெலிகாப்டர்கள் உடனே கிளம்பி வானில் பறக்கதுவங்கியது. மேலும் குறித்த நிலமைகளை அறிந்த ரஷ்ய அதிபர் “விளாடிமிர் புடின்” உடனடியாக ஆபிரிக்காவின் கருங்கடல் பக்கமாக தரித்து நின்ற தனது மேலதிக தாக்குதல் கப்பலை பிரித்தானியா நோக்கி நகர்த்தினார்.இதனைக் கவனித்த பிரித்தானிய பாதுகாப்பு துறை HMS “ரகன்” என்னும் அதி நவீன போர் கப்பலை அவ்விடம் நோக்கி அனுப்பி.முன்னேறிய 2 ரஷ்ய கப்பலை தடுத்து நிறுத்த பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதன்பின் விமானப்படையின் விமானங்கள் உடனடியாக பிரித்தானியாவின் கரையோரங்களை நோட்டமிட ஆரம்பித்தவுடன் மட்டுமல்லாது, இரு நாட்டு ராஜதந்திரிகளும் உடனடியாக ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார்கள். குறித்த தொடர்பில் ரஷ்யா தாம் தாக்குதலுக்கு வரவில்லை என்றும், சிரியா நோக்கி தான் தனது படைகளை நகர்த்துவதாகவும் விளக்கியது. பதிலுக்கு பாதுகாப்பு அமைச்சுகளை தொடர்புகொண்ட பிரித்தானியா தமது கடல்படை தங்களை ஒன்றும் செய்து விட முடியாது என்றும், ரஷ்யாவின் போர் கப்பலை சர்வதேச எல்லைக்குள் கொண்டுசெல்லுமாறு பணித் துள்ளது. இந்நிலையில் தனது மேலும் 2 போர் கப்பலை நிறுத்தி பிரித்தானியாவை மேலும் அதிர்ச்சியூட்ட முயங்சிகளை மேற்கொண்டுள்ளார் புடின். இருந்தும் பிரித்தானியாவின் வான் தாக்குதல் படையினர் தயார் நிலைக்கு வர ரஷ்ய கப்பல்கள் பின்வாங்கி சென்றுள்ளது.சற்று முன்னர் நடந்த இந் நிகழ்வுகளினால் பிரித்தானியாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகின்ற நிலையில் ஐ.நா சபை உட்பட பல பல நாடுகள் ரஷ்யா பிரித்தானியாவுடனான முரண்பாடகளை உடனே நிறுத்தவேண்டும் என அழுத்தங்களை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img