img
img

கிரீன் கார்டு பெறுவதில் புதிய கட்டுப்பாடு - ட்ரம்ப்பின் அடுத்த செக்!
திங்கள் 24 செப்டம்பர் 2018 13:45:59

img

அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினருக்கு வழங்கும் கிரீன் கார்டுகளில் பல்வேறு புதிய விதிமுறைகளைக் கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. 

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து வெளிநாடுகளிலிருந்து வந்து அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்குப் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுவருகின்றன. முன்னதாக ஹெச் ஒன் பி, ஹெச் 4 விசா போன்ற வெளிநாட்டவருக்குச் சலுகைதரும் விசாக்களில் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டது. அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்காகவே இதுபோன்ற நடைமுறைகள் அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு விளக்கம் தெரிவித்திருந்தது. 

இதையடுத்து, தற்போது அந்நாட்டில் குடியேறி புதிதாக கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளவர்கள், அரசு சார்ந்த எந்தச் சலுகைகளையும் பெறக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே கிரீன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு வழங்கப்படும் முதன்மைச் சலுகைகள் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அமெரிக்க உள்துறை பாதுகாப்பு அமைச்சகம் அந்நாட்டு அரசுக்குப் பரிந்துரைசெய்துள்ளது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அமெரிக்காவில் நிரந்தர கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளவர்கள், அர சால் வழங்கப்படும் சலுகைகளைப் பெறும் நிலையில் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் ” என்று கூறப்பட்டுள்ளது. இதனால், பல இந்தியர்க ளுக்கு கிரீன் கார்டு மறுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img