img
img

உலகப் போரில் நாட்டுக்காக பணியாற்றிய பிரபல மாடல் அழகி கோர மரணம்
சனி 28 ஏப்ரல் 2018 17:10:23

img
இரண்டாம் உலகப் போரின் போது தனது நாட்டிற்காக கடமையாற்றிய பிரபல மாடல் அழகி ஒருவர் தனது வாழ்வின் இறுதிக் காலத்தில் கவனிப்பார் யாருமின்றி சிரங்கால் பாதிக்கப்பட்டு நுண் பூச்சிகளுக்கு இரையாகி இறந்திருக்கிறார்.
 
அமெரிக்க முன்னாள் மாடல் அழகியான  ரெபாக்கா ஜேனிம்  தனது முதுமைக்காலத்தில் டெமிண்டியா பிரச்சினையால் அவதியுற்று ஜார்ஜியாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
 
அங்கு சிகிச்சை பெற்றுவரும்போது அங்குள்ள பலருக்கும் சிரங்கு நோய் ஏற்பட்டிருக்கிறது. ரெபாக்காவுக்கு அது தொற்றிக்கொண்டது. மருத்துவமனை நிர்வாகம் சரிவர கவனிக்காததால் ரெபாக்காக்கு சிரங்கு உடல் முழுவதும் பரவி அந்நோயை உண்டு பண்ணும் நுண் பூச்சிகளால் அவர் கொல்லப்ப ட்டுள்ளார்.
 
அவரது கைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதால் அவரது கையைத் தொட வேண்டாம் என்றும் தொட்டால் ஒரு வேளை கை கழன்று விழுந்து விடும் என்றும் நர்ஸ்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. தற்போது மருத்துவமனை நிர்வாகம் மீது ரெபக்காவின் குடும்பத்தி னர் வழக்கு பதிந்துள்ளனர்.
 
ரெபக்காவின் உடலை பரிசோதித்த தடயவியல் நோய் நிபுணர் ஒருவர் தன் வாழ் நாளில் இதுபோன்ற கோர மரணத்தைக் கண்டதில்லை என்றும் அவர் இறக்கும்போது மிகுந்த வேதனையுடனேயே இறந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ரெபக்காவை இந்த நிலையில் விட்டுவிட்டு அவரது குடும்பத்தார் எங்கு சென்றார்கள், ஏன் அவர்கள் அவரது நோயைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்னும் கேள்விகளை ஊடகங்கள் எழுப்பியுள்ளன.
பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img