img
img

நடக்கவே கஷ்டப்படும் உலகின் மிக உயரமான பெண்
வியாழன் 29 செப்டம்பர் 2016 16:12:40

img

துருக்கியில் வசித்து வரும் உலகிலேயே மிக உயரமான பெண்ணான Rumeysa Gelgi-யின் தன்னுடைய வாழ்க்கையை சக்கர நாற்காலியிலே கழிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். துருக்கியின் வடக்கு பகுதியில் உள்ள Safranbolu என்ற நகரத்தில் வசித்து வரும் பெண் Safiye Gelgi. இவருக்கு கடந்த 1997ம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது, இவளுக்கு Rumeysa Gelgi என பெயர் சூட்டினர். மிக மகிழ்ச்சியான குடும்பமாக வாழ்ந்து வந்தவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, Rumeysa Gelgiன் வளர்ச்சி பிறப்பிலிருந்தே சாதாரண குழந்தைகளை விட அதிகமாக இருந்து வந்துள்ளது. தற்போது இவருக்கு பத்தொன்பது வயதாகிறது, அவர் ஏழு அடி உயரத்தில் தற்போது இருக்கிறார்! Weaver Syndrome என்ற விசித்திர நோயால் தான் இவருக்கு இந்த வளர்ச்சி என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் சந்திக்கும் பிரச்சைனைகள் ஏராளம். இதுபற்றி அவர் கூறுகையில், சிறுவயதிலிருந்தே என்னை எல்லாரும் விசித்திரமாக பார்ப்பார்கள். எனக்கு ஆறு வயது ஆன பின்னர் தான் இதை நான் உணர்ந்தேன் என கூறியுள்ளார். அதிக உயரத்தால் முதுகெலும்பு பிரச்சனையால் அவதிப்படும் Rumeysa Gelgiன் சக்கர நாற்காலி, ஊன்று கோல் உதவியுடன் தான் வாழ்ந்து வருகிறார், இவரின் பெற்றோர்கள் பக்கபலமாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img