img
img

17 உயிர்களைப் பலிகொண்ட ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு! - அமெரிக்காவை அச்சுறுத்தும் `மனநோய்'
வியாழன் 15 பிப்ரவரி 2018 14:25:41

img

அமெரிக்காவை உலுக்கியுள்ள ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் குற்றவாளி, 19 வயது இளைஞரைப் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மர்ஜோரி ஸ்டோன்மேன் டக்லஸ்  உயர்நிலைப் பள்ளியில்தான் இந்தக் கோர சம்பவம் நிகழ்ந்தது. அடுத்த சில நொடிகளில் நடக்கப்போகும் பயங்கரத்தை அறியாமல், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென பள்ளி க்குள் நுழைந்த இளைஞர், சுற்றியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார். மாணவர்கள் உட்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிறிது நேரத்தில் சம்பவ இடத்துக்கு போலீஸ் விரைந்துவந்தது. படுகாயமடைந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரையும் கைதுசெய்தது. 

இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது, அப்பள்ளியின் முன்னாள் மாணவர்  நிகோலஸ் கிரஸ். அவரைப் பற்றி ஊடகங்களுக்கு மாணவர்கள் பகிர்ந்துகொண்ட தகவல்கள் பின்வருமாறு...

'நிகோலஸின் ஒழுங்கீனமான நடத்தையால் பள்ளியிலிருந்து கடந்த ஆண்டு வெளியேற்றப்பட்டான். அதற்குப் பிறகு, ஒராண்டு அவனைப் பற்றி நாங்கள் அனைவரும் மறந்துவிட்டோம். சமீபத்தில், மீண்டும் பள்ளிக்கு வரத் தொடங்கினான். மிகவும் நல்லவன் போன்று பேசினான். சிறிது நாள்களில் அவன் செயல்பாடுகளில் வித்தியாசம் தெரிந்தது. எப்போதும் துப்பாக்கி பற்றியே பேசிக்கொண்டிருப்பான். விலங்குகளைக் கொன்று வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பகிர்வான். எங்களுக்கு அப்போதே தெரியும், இப்படி ஏதோ நடக்கப் போகிறதென்று. அவனைவிட்டு விலகத் தொடங்கினோம். அதுவே, அவன் கோபத்தை அதிகரித்திருக்கும் என்று தோன்றுகிறது’ என்றனர். 

இதுகுறித்து நகர ஷெரீப் ஸ்காட் பேசுகையில்,  ’நிகோலஸ் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்துக்கான சிகிச்சைபெற்று வந்திருக்கிறார். தற்போது, போலீஸ் காவலில் உள்ளார்.  அவரிடமிருந்து துப்பாக்கிக் குண்டுகளைப் பறிமுதல்செய்துள்ளோம்’ என்றார். 

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. சொல்லி வைத்தார்போல குற்றவாளிகள் அனைவரும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். மன அழுத்தத்துக்கு சிகிச்சைபெற்று வருபவர்களாக இருக்கிறார்கள். `இது, மிகவும் அபாயகரமான போக்கு. அமெரிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அமெரிக்க மக்கள் வலியுறுத்திவருகின்றனர். 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img