img
img

கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் போர் பதற்றம்
செவ்வாய் 02 மே 2017 07:42:23

img

வட கொரியா கடற்பகுதிக்குள் நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க போர்க் கப்பலுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில், ஜப்பான் தனது ராணுவத்தின் மிகப் பெரிய போர்க் கப்பலை அனுப்பியுள்ளது. இதற்கான உத்தரவினை ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் தோமிமி இனாடா பிறப்பித்துள்ளார். 249 மீற்றர் நீளம் கொண்ட இஜூமா எனும் இந்த போர்க் கப்பலில் இருந்து 9 ஹெலிகாப்டர்களை இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வட கொரியாவின் கடற்பகுதிக்குள் தற்போது நிறுத்தப் பட்டிருக்கும் அமெரிக்காவின் கார்ல் வின்சன் போர்க்கப்பலுக்கு பாதுகாப்பு அளிக்கவும், எரிபொருள்களை வழங்குவது உள்ளிட்ட உதவிகளை செய்ய வும் இந்த கப்பலை ஜப்பான் அனுப்பியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜப்பான் மேற்கொண்டிருக்கும் மிக முக்கிய ராணுவ நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின்போது தான் பயன்படுத்திய போர்க் கப்பலைப் போன்றது இது என ஜப்பான் தெரிவித்துள்ளது. ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராகவும், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வட கொரியாவின் ராணுவ நடவடிக்கை, தங்கள் நாடுகளின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என தென் கொரியாவும், ஜப்பானும் தொடர்ந்து அச்சம் வெளியிட்டு வருகின்றன. தொலைவில் உள்ள அமெரிக்காவைத் தாக்கும் வகையிலும், நீண்ட தூர ஏவுகணைகளை தயாரிக்கும் முனைப்பில் வட கொரியா ஈடுபட்டு வருகிறது. இதனால், அமெரிக்காவும் கவலை அடைந்துள்ளது. வட கொரியாவின் அணு ஆயுத உற்பத்தியைத் தடுக்கவும், நீண்ட தூர ஏவுகணைச் சோதனைகளை முறியடிக்கவும் திட்டமிட்டுள்ள அமெரிக்கா, வட கொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகிறது. இதனால், கொரிய தீப கற்பத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img