img
img

பாகிஸ்தான் துறைமுகம் சீனா வசமானது!
சனி 29 ஏப்ரல் 2017 17:24:09

img

பாகிஸ்தானின் அரபிக்கடலின் கரையில் அமைந்துள்ள குவாடர் துறைமுகத்தைச் சீனா கையகப்படுத்தியுள்ளது. துறைமுகத்தை 40 ஆண்டுக் குத் தகைக்குச் சீன நிறுவனத்திடம் அளித்துவிட்டதாகப் பாகிஸ்தான் கப்பல் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் அறிவித்திருக்கிறார். சீனா தொடர்ந்து பாகிஸ்தானுக்குக் கடனுதவி செய்துவருகிறது. இதன் காரணமாக, ''சீனாவிடமிருந்து பெற்ற அதிகப்படியான கடனால் பாகிஸ்தான், தம் முடைய வருவாயில் பெரும்பகுதியைச் சீனாவுக்குக் கொடுத்தால் விரைவில் அது திவால் ஆகும்'' என்று அந்த நாட்டு வல்லுநர்கள் எச்சரிக்கும் சூழலில், சீனா - பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 62 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் சீனா முதலீடு செய்தி ருக்கிறது. சீனா - பாகிஸ்தான் சாலை திட்டத்தின் கீழ், சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தில் இருந்து பாகிஸ்தான் குவாடர் நகரம் வரையில் சாலை வசதி உருவாக்கப்படும். மேலும், இந்தப் பாதையை ஒட்டி ரயில் பாதை, தொழில்நுட்ப பூங்காக்களை ஏற்படுத்தச் சீனா திட்டமிட்டுள்ளது. துறைமுகத்தின் இயக்க வருவாயில் 90 சதவிகிதமும், வரியில்லாத் துறைமுகச் சேவை மூலம் கிடைப்பதில் 85 சதவிகிதமும் சீனா நிறுவனம் எடுத்துக் கொள்ளும். இதுதவிர, பல்வேறு வரிச் சலுகையும் சீனா நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகள்வரை இந்தத் துறைமுகத்தை இயக்கி, முழு லாபத்தையும் சீனா எடுத்துச்செல்லும். அதன்பிறகு, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் துறைமுகம் ஒப்படைக்கப்படும். இந்தத் துறைமுக இயக்கத்தின் மூலம், அரேபியாவை ஒட்டி உள்ள ஹர்மூஸ் நீரிணைப்புப் பகுதியில் செயல்பட்டுவரும் சீனக் கப்பல் படைக்கு, மிகச் சரியான தளமாகக் குவாடர் துறைமுகம் இருக்கும். அரபிக்கடல் பிராந்தியத்தில் தன்னுடைய கப்பற்படை ஆதிக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில்தான் தொடக்கத்தில் இந்தத் துறைமுகத்தை மேம்படுத்திக்கொடுக்கச் சீனா முன்வந்தது. தற்போது, 40 ஆண்டுகால ஒப்பந்தம் மூலம் அது நிறைவேறியுள்ளது. அடுத்ததாக, குவாடர் துறைமுகத்தைக் கையாளுவதன் மூலம், சீனாவின் சிஞ்சியாங் மாகாணம் வழியாகப் பொருட்களை மிக விரைவாகச் சீனாவுக்குள் கொண்டுவரலாம். அதேபோல், ஏற்றுமதியும் செய்ய முடியும். இந்தியா, மலேசியாவைச் சுற்றிப் பொருட்களை எடுத்துச்செல்லும் செலவு குறையும். அடுத்தகட்டமாக, இந்நிறுவனம் இங்கிருந்து பாகிஸ்தான் வழியாகக் குழாய் மூலம் கச்சா எண்ணெயை மத்திய கிழக்குச் சீனாவுக்குக் கொண்டுசெல்லத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், மலேசியாவை ஒட்டிய கடல் பகுதி வழியாகச் சுற்றிச் செல்லும் கப்பல் பயணத் தூரம் குறையும். இங்குக் கப்பல் படை தளம் அமைவது இந்தியாவுக்குப் பாதுகாப்பின்மையையும், பாகிஸ்தானுக்கு அதிகத் துறைமுக வருவாயையும் கொடுக்கும். அது வேறு வகையில் இந்தியாவுக்கு இழப்பாகவே இருக்கும். இதை எதிர்கொள்ள, வங்கதேசத்துக்கு உதவுவதுபோல், ஈரானின் சப்பார் துறைமுகத்தை இந் தியா கட்டமைத்துவருகிறது. இந்தத் துறைமுகம், குவாடர் துறைமுகத்தில் இருந்து 100-க்கும் குறைவான கடல் மைல் தொலைவில்தான் அமைந் திருக்கிறது. இந்தத் துறைமுகத்தின் மூலம், மத்திய ஆசிய நாடுகள் பயன்பெறும். சீனாவின் ஆதிக்கமும் கட்டுப்படுத்தப்படும்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img