img
img

பிரான்ஸ் நாட்டில் அகதிகளுக்கு அனுமதி இல்லை
புதன் 19 ஏப்ரல் 2017 09:39:26

img

பிரான்ஸ் நாட்டில் கட்டுப்பாடு இல்லாத அளவிற்கு அகதிகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என அதிபர் வேட்பாளரான லீ பென் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் எதிர்வரும் 23-ம் திகதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் பிரச்சாரங்கள் சூடு பிடித்து வருகிறது. தேசிய முன்னணி(NF) கட்சியை சேர்ந்த லீ பென் என்பவர் தற்போது ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில், பிரான்ஸ் தலை நகரான பாரீஸில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் லீ பென் பேசியுள்ளார்.அப்போது, ‘பிரான்ஸ் நாட்டில் அளவுக்கு அதிகமான அகதிகளை அனுமதிக்க முடியாது. பிரான்ஸ் நாடு குடிமக்களுக்கு சொந்தமான நாடாக செயல்படவில்லை.எண்ணிக்கை இல்லாத அளவில் அகதிகளுக்கு அனுமதி கொடுத்தால், பிரான்ஸ் நாட்டில் தீவிரவாதம் அதிகரித்து விடும்.புகலிடம் கோரி வரும் அகதிகளை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை இயற்றுவேன்’ எனவும் லீ பென் உறுதி யளித்துள்ளார். நான் அதிபராக தெரிவானால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10,000 புலம்பெயர்ந்தவர்களை தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்புவேன் எனவும், தான் அதி பராக பதவி வகித்திருந்தால் பாரீஸ் மற்றும் நைஸ் நகரங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நிகழ்ந்திருக்காது என லீ பென் கூட்டத்தில் பேசியுள்ளார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img