img
img

வீடியோ பார்த்தால் 7 நாளில் கொல்லும் பேய்!
திங்கள் 20 பிப்ரவரி 2017 13:10:03

img

ஜப்பானிய ஹாரர் படங்களுக்குப் பெரிய வரவேற்பு எப்போதுமே இருக்கும். ‘தி க்ரட்ஜ்’, ‘ஒன் மிஸ்டு கால்’, ‘ரிங்’ என வரிசையாகப் பல படங்கள் ஹாலிவுட்டில் ரீமேக்கும் செய்யப்பட்டன. இதில் ’ரிங்’ படமே இரண்டு பாகங்களாக ஹாலிவுட்டில் வெளியானது. அதன் மூன்றாவது பாகம் ‘ரிங்ஸ்’ இப்போது வெளியாகியிருக்கிறது. அது ஒரு வீடியோ டேப். அதிலிருக்கும் வீடியோ மிக விநோதமான ஒன்று. அந்த சாபம் உள்ள வீடியோவைப் பார்ப்பவர், ஏழு நாட்களில் இறந்துவிடுவார். இதுதான் ’கொஜி சுஷுகி’ 1991-ல் எழுதிய ஜப்பானிய நாவல் 'ரிங்'-கின் பாட்டம் லைன். இதைத் தழுவி 1998-ல் ஹைடியோ நகாடா ஜப்பானிய மொழியில் இயக்கினார். அதைத் தொடர்ந்து, கொரிய மொழியிலும், ஹாலிவுட்டிலும் ரீமேக் செய்தார்கள். எல்லாவற்றிலும் அதே வீடியோ டேப்; அதே ஏழு நாள் கெடுதான். இப்போது வெளியாகியிருக்கும் படத்தில், ’ஸ்பெஷல் அடேங்கப்பா ஆஃபர்’ ஒன்றை இணைத்திருக்கிறார்கள். ஏழு நாட்களுக்குள் நீங்கள் பார்த்த வீடியோவை ஒரு காப்பி எடுத்து இன்னொருவரைப் பார்க்க வைத்துவிட்டால், மரணத்திலிருந்து நீங்கள் தப்பிவிடலாம். ஆரம்பத்திலேயே அந்த வீடியோவைப் பார்த்த ஒருவர் தப்பிக்க நினைத்து விமானத்தில் செல்ல, மொத்த பேரும் விபத்துக்குள்ளாவதில் இருந்து துவங்கி, வீடியோவின் விபரீதத்தை உணர்த்துகிறார்கள். இரண்டு வருடங் களுக்குப் பிறகு பேராசிரியர் கேப்ரியல் கையில் அந்த டேப் கிடைக்க, அவர் அதை வைத்து ஆராய்ச்சிகள் செய்து, பேய் இருக்கிறது என நிரூபிக்க நினைக்கிறார். ஜூலியா - ஹால்ட் இருவரும் காதலர்கள். ஹால்ட் சேரும் கல்லூரியில்தான் கேப்ரியலும் இருக்கிறார். ஹால்ட் ஆபத்தில் இருக்கிறான் என ஜூலியாவுக்குத் தகவல் வர, அவனைப் பார்ப்பதற்காகச் செல்கிறாள். அங்குதான் இந்த டேப் பற்றி அவளுக்குத் தெரிய வருகிறது. ஹால்ட், கேப்ரியலின் ஆராய்ச்சிக்காக அந்த வீடியோவைப் பார்த்துவிட்டான், அவனைக் காப்பாற்றுவதற்காக அந்த வீடியோவைப் பார்க்கிறாள் ஜூலியா. வீடியோ முடிந்த அடுத்த நொடி தொலைபேசி ஒலிக்கிறது, ஹஸ்கி வாய்ஸில்..."செவன் டேய்ஸ்' எனக் குரல் கேட்கிறது. பின்பு என்ன ஆகிறது என்பது மீதிக் கதை.

பின்செல்

img
வீடியோ பார்த்தால் 7 நாளில் கொல்லும் பேய்!

ரிங்ஸ் படம் எப்படி?

மேலும்
img
முத்தமா? நெருக்கமா? நோ ப்ராப்ளம் - ஹாலிவுட் நடிகை பளீச்

பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் இருவரும் பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்

மேலும்
img
வேற்றுகிரகவாசிகளின் தாக்குதலில் மீண்டும் அமெரிக்கா?

ரோலன்ட் எமெரிச் இயக்கத்தில் பிரம்மாண்டாக உருவாகி 1996ஆம் ஆண்டு உலகமெங்கும்

மேலும்
img
மீண்டும் பயமுறுத்தும் ‘கான்ஜுரிங்’

கோலிவுட்டில் பேய் சினிமா ராஜ்ஜியம் செய்துகொண்டிருக்க,

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img