img
img

இரட்டை மொழித் திட்டம் நடைமுறை சவால்களை எதிர் கொள்ளுமா?
திங்கள் 13 பிப்ரவரி 2017 14:22:44

img

மழைவிட்டும் தூவானம் விடவில்லை - 2017- ஆம் ஆண்டு முதல் 47 தமிழ்ப்பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டிருக்கும் இரட்டை மொழிகல்வி திட்டத்தை பொறுத்தவரை இதுதான் இன்றையச் சூழல் என்று ஏவுகணை கருதுகின்றது. ஏவுகணையைப் பொறுத்தமட்டில், தமிழ்ப்பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை இவ்வாண்டு முதலாம் மற்றும் நான்காம் ஆண்டுகள் தொடங்கி ஆங்கில மொழியில், தமிழ்மொழியில் போதிக்கும் நடைமுறை சாதகமான நன்மைகளையே ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்தியே வந்துள்ளது. டிஎல்பியின் (Dual Language Programme) அமலாக்கத்தினைத் தமிழ்ப்பள்ளிகளில் அமல் படுத்தக் கூடாது என்பதைக் கூறுவதற்குத் தகுதியானவர்கள் பெற்றோர்களே என்பதன் அடிப்படையில் அதனை கல்வி தொடர்பு அறவே இல்லாத அரசு சாரா இயக்கங்கள் கோரிக்கை விடுப்பது அநாகரிகமான செயலாக ஏவுகணை கருதுகின்றது. ஏற்கெனவே நாட்டில் உள்ள 524 தமிழ்ப்பள்ளிகளும் ஏறக்குறைய 50% மாணவர்களை தேசியப் பள்ளிகளுக்கும் சீனத் தொடக்கப்பள்ளிகளுக்கும் தாரை வார்த்துள்ள நிலையில் இரட்டை மொழித் திட்டத்தினை தமிழ்ப்பள்ளிகளில் அமலாக்கம் செய்வதைத் தடுத்தால் மேலும் நூற்றுக்கணக்கான தமிழ்ப்பள்ளிகளை இழக்க நேரிடுவதோடு மட்டுமல்லாமல் தமிழ்ப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் இடைநிலைப்பள்ளிகளின் கல்வியை முடமாக்கும் நடவடிக்கையாகவும் அமைந்து விடும் என்ற அச்சம் மேலோங்கியுள்ளதை உணர்ச்சிகரமாக மட்டுமே பேசி வரும் அடையாளம் இல்லாத அரசு சாரா இயக்கங்களால் உணர முடியாது என்பதை ஏவுகணையால் உறுதியாகக் கூற முடியும். இடைநிலைப்பள்ளிகளின் கல்வி அமைப்பு மலேசியக் கல்வியமைச்சின் இடைநிலைப்பள்ளிகளுக்கான அமைப்பு மலேசிய இந்திய மாணவர்களுக்கு சாதகமாக அமைந்திருக்கவில்லை என்பதைப் பற்றி எந்த ஒரு அரசு சாரா இயக்கமும் வாய் திறக்காத நிலையில் இந்திய மாணவர்கள் பல்வேறு சவால்களை எதிர் நோக்கி இருப்பதையாவது உணர்வார்களா? என ஏவுகணை கேட்க விரும்புகின்றது. மலேசியக் கல்வி அமைச்சின் (Kementerian Pelajaran Malaysia -KPM) இடைநிலைப்பள்ளிகளுக்கான கல்வி முறை பின்வருமாறு அமைந்திருக்கின்றது. ஆறு ஆண்டுகள் தமிழ்ப்பள்ளியில் படித்த இந்திய மாணவர்கள் படிவம் 1-ற்குச் செல்லும் போது சுமார் 95% ட்டு மாணவர்கள் தினப்பள்ளிகளாக செயல்பட்டு வரும் இடைநிலைப்பள்ளிகளுக்கே (SMK Harian) செல்லும் வாய்ப்பினை மட்டுமே பெற்றுள்ளதை அனைவரும் அறிவோம்! * இளநிலை அறிவியல் கல்லூரி (MRSM) * முழு நேர தங்கும் விடுதிப் பள்ளிகள் (Sekolah Berasrama Penuh-SBP) * முழு நேர தங்கும் விடுதிச் சமயப் பள்ளிகள் (SMA Berasrama) * அறிவியல் இடைநிலைப்பள்ளிகள் (Sekolah Menengah Sains) * தொழில் திறன் நுட்பக் கல்லூரிகள் (Kolej Vokasional/ Teknik) * தனியார் சீன இடைநிலைப்பள்ளிகள் (SMJK) * இடைநிலைப்பள்ளிகள் (SM Kebangsaan Harian) மேற்காணப்படும் இடைநிலைப்பள்ளிகள் இன ரீதியிலான அடிப்படையிலேயே செயல்பட்டு வருவதை அனைவரும் அறிவோம். ஆரம்பப்பள்ளிகளில் பயிலும் மலாய் மாணவர்களுக்கு தேர்ச்சிக்கேற்ப இடைநிலைப்பள்ளிகள் வழங்கப்படும் நிலையில் மூன்றாம், நாலாந்தர மாணவர்களே தேசிய வகை இடை நிலைப்பள்ளிகளில் பயில்வதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கிடையே ஆரம்பப்பள்ளிகளில் பயின்று வரும் சீனப்பள்ளி மாணவர்களே அரசாங்க உதவி பெற்று வரும் சீனப் இடைநிலைப்பள்ளிகளிலும், தனியார் இடைநிலைப்பள்ளிகளிலும் பதிந்து கொள்ளும் நிலையில் இரண்டாந்தர மாணவர்களும் கல்வியில் பின் தங்கியவர்களும் மட்டுமே தேசிய வகை இடைநிலைப்பள்ளிகளில் பயில வரும் நிலையில் தமிழ்ப்பள்ளி, தேசியப் பள்ளிகளில் பயின்று வரும் இந்திய மாணவர்கள் வேறு வாய்ப்புகள் இல்லாமல் தேசிய வகை இடைநிலைப்பள்ளிகளில் மட்டுமே படிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். ஏற்கெனவே ஆரம்பப் பள்ளிகளில் பயின்ற மலாய் மாணவர்கள் உயரிய வசதிகளையும், வாய்ப்புகளையும் கொண்ட இடைநிலைப்பள்ளிகளுக்குச் செல்லும் சூழலில் தேசிய வகை இடைநிலைப்பள்ளிகள் என தினப்பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகளை ஏற்படுத்தி இன ரீதியிலான கல்வி முறைக்கான வாய்ப்பினைப் பற்றி யாருமே குரல் எழுப்பியதாக ஏவுகணை அறியவில்லை. தேசிய வகை இடைநிலைப்பள்ளிகளில் (SMK) பள்ளிகளில் பணியாற்றும் முதல்வர்களின் விருப்பத்திற்கு ஏற்ப படிவம் ஒன்றிற்கான வகுப்புகள்: * சிறப்பு பிரத்தியேக வகுப்புகள் (Kelas Rancangan Khas-KRK) * சிறப்பு சமய பிரத்தியேக வகுப்புகள் (Kelas Rancangan Agama- KRA) * சிறப்பு தொழில் திறன் வகுப்புகள் (Kelas Pengenalan Asas Vokasional -PAV) என்பதாக இன ரீதியாக பிரித்து வைக்கப்பட்டிருக்கும் வகுப்புகள் இரட்டை மொழித் திட்டத்தின் வழி மேலும் ஒரு வகுப்பும் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தமிழ்ப்பள்ளிகளில் டிஎல்பி பாடத்திட்டத்தினை அமல்படுத்தாமல் விடுபட்டால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நான்காவது அல்லது ஐந்தாவது வகுப்புகளில் மட்டுமே தஞ்சமடைய வேண்டியிருக்கும் என்பதை யாராவது சிந்தித்தார்களா? ஓரங்கட்டப்பட்ட இந்திய மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் டிஎல்பி பாடத்திட்டத்திற்கு எதிர்ப்பினைத் தெரிவிப்பவர்களில் பெரும்பாலோர் கல்வி துறையில் இல்லாதவர்கள் என்பதோடு மட்டுமல்லாமல் இடைநிலைப்பள்ளிகளில் இந்திய மாணவர்கள் ஓரங்கட்டப்படும் திட்டங்களைப் பற்றியும் இந்திய மாணவர்கள் தினப்பள்ளிகளான இடைநிலைப்பள்ளி களிலேயே நம்பியிருக்கும் நிலையில் டிஎல்பி திட்டத்தில் இடம் பெறாவிட்டால் * மாரா அறிவியல் இளநிலைக் கல்லூரி * முழு நேர தங்கும் விடுதிப்பள்ளிகள் * அறிவியல் இடைநிலைப்பள்ளிகள் * தொழில் திறன் கல்லூரிகள் போன்றவற்றில் கல்வி பயிலும் வாய்ப்புகளை முழுமையாக இழந்து விடும் அபாயம் இருப்பதை அறிவுடையவர்களாகச் சிந்திக்க வேண்டும் என ஏவுகணை கேட்டுக் கொள்கின்றது. எஸ்பிஎம் தேர்விற்குப் பிந்திய மெட்ரிகுலேஷன் கல்லூரி வாய்ப்புகள் தற்போது 1,500 இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் டிஎல்பி கல்வி முறையை உணர்ச்சியின் பெயரால் நழுவ விட்டால் ஒரு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குக் கூட மெட்ரிகுலேஷன் கல்லூரி வாய்ப்புகள் கிடைக்காது என்பதை யாராவது மறுக்க முடியுமா? ஆக மொத்தத்தில் தமிழ்ப்பள்ளிகளில் டிஎல்பி எனப்படும் இரட்டைமொழித் திட்டத்தினை அரசு சாரா இயக்கங்களின் விவேகமற்ற நடவடிக்கைகளால் தமிழ்ப்பள்ளிகள் இழக்க நேரிடுமானால் தமிழ்ப்பள்ளி மாணவர் களின் எதிர்காலத்திற்கு எவ்வகையான உத்தரவாதத்தினை வழங்கப்போகின்றார்கள் என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் என ஏவுகணை கோரிக்கை வைக்கின்றது. நாளை மேலும் தகவல்களோடு ஏவுகணை சந்திக்கும். * தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முழுமையாக ஓரங்கட்டப்படுவார்கள் * இடைநிலைப்பள்ளிகளில் பிரித்தாளும் கொள்கையில் மிகப் பெரிய அபாயம் * சிறப்புப் பள்ளிகளுக்கான வாய்ப்புகள் பறிபோகும் சூழல் * மெட்ரிகுலேசன் கல்லூரி வாய்ப்புகள் கானல் நீராகப்போகும்.

பின்செல்

தீர்வை நோக்கி

img
தண்ணீர் - தண்ணீர் - தண்ணீர்! நிரந்தரத் தீர்வு எங்கே

ஸ்ரீ செர்டாங் வட்டார மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்

மேலும்
img
தோட்டத் தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்தவர்கள் யார்?

கடந்த 1973 -ஆம் ஆண்டு தொழிலாளர் அமைச்சின்...

மேலும்
img
மலேசிய இந்தியர்கள் அரசியல் உரிமையை இழக்கலாமா?

மலேசிய இந்தியர்களிடையே காணப்படும் அலட்சியப் போக்கு!

மேலும்
img
கடனில்லாத பட்டதாரி மாணவரை உருவாக்குவோம்!

மலேசிய இந்திய மாணவர்களிடையே தற்போது பரவலாக..

மேலும்
img
இரட்டை மொழித் திட்டம் நடைமுறை சவால்களை எதிர் கொள்ளுமா?

ஓரங்கட்டப்பட்ட இந்திய மாணவர்கள்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img