img
img

`இரண்டாம் நம்பர் பிசினஸ்; கலப்பட கருப்பட்டி!' - கருணாஸை முடக்கும் எடப்பாடி பழனிசாமி
செவ்வாய் 25 செப்டம்பர் 2018 14:40:47

img

கருணாஸ் எம்.எல்.ஏவைக் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர் போலீஸார். `கருணாஸை இயக்கியது யார் என்பதை அறிவதில் உறுதியாக இருக்கிறார் முதல்வர். தினகரனுக்கு செலவு செய்யும் கருணாஸ் தரப்பினர் குறித்தும் உளவுத்துறை போலீஸார் அறிக்கை ஒன்றை அளித்துள்ளனர்' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். 

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிசாமிக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைப் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார் கருணாஸ். அவரது இந்தப் பேச்சுக்கு எதிராக நாடார் சமூக அமைப்புகளும் போர்க்கொடி உயர்த்தின.

இதனையடுத்து, கருணாஸ் பேசிய வீடியோ பதிவை வைத்து அவர் மீது எட்டுப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வைத்து கருணாஸைக் கைது செய்தனர். இதன்பின்னர், கருணாஸ் பேச்சின் பின்னணி குறித்து விசாரிப்பதற்காக 7 நாள் போலீஸ் காவல் கோரி, எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர் நுங்கம்பாக்கம் போலீஸார்.

முதல்வரை மிரட்டியது; ஐ.பி.எஸ் அதிகாரி அரவிந்தனை மிரட்டியது; தினமும் குடிப்பதற்காக ஒரு லட்சம் செலவு செய்வது; இந்தப் பணம் வரக் கூடிய பின்னணி ஆகியவை குறித்து முழுமையாக ஆராய உள்ளனர். இதையறிந்து ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருக்கிறார் கருணாஸ். அந்த மனுவில், `நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. பொதுக்கூட்டத்தில் பேசியதை வைத்து வழக்கு போட்டுள்ளனர். வேண்டும் என்றே என்னை உள்நோக்கத்துடன் கைது செய்துள்ளனர்' எனக் குறிப்பிட்டுள்ளார். 

கருணாஸ் விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர்,``சாதிரீதியாக கருணாஸ் முன்வைத்த தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை. யாருடைய சுயநலத்துக்காக அவர் சாதியை இழுத்துப் பேசினார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. சசிகலா கணவர் எம்.நடராஜன் செய்த அதே தவறைத்தான் இவரும் செய்கிறார்.

சமூகரீதியான மோதலை அதிகப்படுத்துவதன் மூலம், குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்வதுதான் இவர்களின் நோக்கமாக இருந்திருக்கிறது. இதன் அடுத்தகட்டமாக கருணாஸுக்கு நெருக்கடிகளைக் கொடுத்து, அவர்மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளைத் தொடங்கவும் சில அமைப்பினர் தயாராக இருக்கிறார்கள்.

கருணாஸ் அமைப்பினர் நடத்தி வரும் சட்டவிரோத தொழில்கள் குறித்தும் விரிவான பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. சிறையிலிருந்து வெளியில் வந்தாலும் கருணாஸால் இனி நிம்மதியாக இருக்க முடியாது. இந்த விவகாரத்தை எடப்பாடி பழனிசாமியும் அவ்வளவு எளிதில் விடுவதாக இல்லை. கருணாஸுக்கு எதிராக நாடார் சமூகத்தினர் களமிறங்கியிருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார் முதல்வர். கருணாஸ் கைதுக்கு அவரது சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்களே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை" என விவரித்தவர், 

``முக்குலத்தோர் சமூக வாக்குகளை குறிப்பிட்ட ஒரு கட்சியின் பக்கம் கொண்டு வருவதற்காகத்தான் இவ்வாறு பேசியிருக்கிறார் கருணாஸ். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை அறிவதற்காகத்தான் போலீஸ் காவல் கேட்கப்பட்டிருக்கிறது. `நம்மைக் கைது செய்யாவிட்டால், எடப்பாடி இமேஜ் அடிபடும்' என நினைத்தார் கருணாஸ். அப்படியே கைது செய்தாலும் சமூகரீதியான மோதல்கள் நடக்கும் எனவும் சிலர் எதிர்பார்த்தனர். மனு வின் அடிப்படையில், 7 நாள் அல்லது இரண்டு நாள் போலீஸ் காவல் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சமூகரீதியாக மோதலை உண்டாக்கி, தமிழ கத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க நினைத்தார்களா என்பதையும் விசாரிக்க உள்ளனர் காவல்துறை அதிகாரிகள். 

முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி, வெங்கடேசப் பண்ணையார் நினைவு தினம் போன்றவற்றில் குழப்பத்தை ஏற்படுத்தும் திட்டமும் இருந்ததா என்பது வும் விசாரணையின் மைய நோக்கமாக இருக்கப்போகிறது. இதுகுறித்து அறிக்கை அளித்துள்ள உளவுத்துறை அதிகாரிகளோ, `கருணாஸைச் சுற்றி யிருப்பவர்கள் யாரும் நமக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை. கருணாஸுக்கு ஆதரவாக அவரது சமூக அமைச்சர்களே வர மாட்டார்கள்.

கந்துவட்டி தடைச் சட்டம் போன்றவற்றின் அடிப்படையில் கருணாஸ் ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களில் சிலர்தான் தினகரனுக்குச் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் நம்பர் பிசினஸ் செய்து இவர்களில் சிலர் தினகரனுக்குச் செலவு செய்கின்றனர். குறிப்பாக, இவர்களில் சிலர் கலப்படக் கருப்பட்டியைத் தயாரித்து கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். இதைக் கண்டறிந்து விற்பனையைத் தடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கும் முதல்வர் அனுமதி அளித்துவிட்டார்.

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img