img
img

மிஸ் இந்தியா 2018' பட்டம் வென்றார் சென்னை கல்லூரி மாணவி, உலக அழகி போட்டிக்கு தகுதி
புதன் 20 ஜூன் 2018 13:23:16

img
சென்னை,
 
2018-ம் ஆண்டுக்கான இந்திய அழகி போட்டியின் இறுதிச் சுற்று நேற்றிரவு மும்பையில் நடைபெற்றது.30 பேர் கலந்துக்கொண்ட அழகி போட்டியில் வெற்றியாளர்களை கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்டோர் அடங்கிய குழு தேர்வு செய்தது. போட்டியில் சென்னையைச் சேர்ந்த 19 வயதான அனு கீர்த்தி வாஸ் இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
 
 
அவருக்கு 2017-ம் ஆண்டு இந்திய அழகி பட்டம் மற்றும் உலக அழகி பட்டத்தை வென்ற மனுஷி சில்லார் மகுடம் சூட்டினார். 2017 நவம்பரில் சீனாவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் 2017-ம் ஆண்டுக்கான உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். 
 
அனுகீர்த்தி வாஸ்  சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பிரெஞ்ச் படித்து வருகிறார். 2018-ம் ஆண்டிற்கான இந்திய அழகியாக தேர்வுசெய்யப்பட்டதன் மூலம் உலக அழகி போட்டிக்கு தகுதிப்பெற்றார். நடிப்பிலும், மாடலிங்கிலும் ஆர்வம் உடைய அனு கீர்த்திவாஸ், இந்த ஆண்டு நடைபெறும் உலக அழகிப்போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பார். போட்டியில் அரியானாவை சேர்ந்த மீனாட்சி சௌத்ரி, ஆந்திராவை சேர்ந்த ஷ்ரேயா ராவ் ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்தார்கள். அனு கீர்த்திவாஸ் ஒரு நடன கலைஞரும் மற்றும் தடகள வீரரும் ஆவார்.
 
இந்திய அழகி பட்டத்தை வென்று உலக அழகி போட்டிக்கு செல்லும் அனு கீர்த்திக்கு பல்வேறு தரப்பில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img