img
img

மெர்குரி படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ரஜினிகாந்த்
செவ்வாய் 24 ஏப்ரல் 2018 17:25:51

img
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் `மெர்குரி' படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்கு ழுவினரை நேரில் அழைத்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 
 
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக படஅதிபர்கள் நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மெர்குரி' படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தமிழகத்தில் வெளியானது. வசனங்களே இல்லாமல், சைலண்ட் த்ரில்லர் கதையில் உருவாகி இருக்கும் மெர்குரி' படத்தில் பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான் இந்துஜா, அனிஷ் பத்மன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையிலேயே பயணித்த இந்த படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்ததுடன், நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. 
 
இந்நிலையில், படத்தை பார்த்த நடிகர் ரஜனிகாந்த் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். படம் குறித்து ரஜினி கூறும் போது, பிரபு தேவா கலக்கிட்டாரு, கேமரா, இசை, ஸ்டன்ட் என எல்லாமே அருமை. மொத்தத்தில் சிறந்த படம் என்று பாராட்டியதாக படக்குழுவினர் தெரி வித்துள்ளனர். ரஜினியின் வாழ்த்தால் `மெர்குரி' படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. ரஜினி அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
மெஹந்தி சர்க்கஸ்

ஸ்வேதாவின் மகள் தனது தாயின் பழைய

மேலும்
img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img