img
img

கண்திருஷ்டி கழிக்க சன்னி லியோன் ஃப்ளெக்ஸ்! விவசாயியின் கில்லாடி டெக்னிக்
புதன் 14 பிப்ரவரி 2018 13:57:10

img

அமோக விளைச்சலால் கண்திருஷ்டி படுவதாகக் கூறி, நடிகை சன்னி லியோன் படத்தை தனது வயலில் வைத்து, பார்ப்பவர்களை அதிரவைத்துள்ளார், ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த விவசாயி செஞ்சு ரெட்டி.

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த விவசாயி செஞ்சு ரெட்டிக்கு ஏராளமான நில புலன்கள் இருந்தன. விளைச்சலும் அமோகம். இதனால், அக்கம்பக்கத்த வர் கண்படுவதாக செஞ்சு ரெட்டி அஞ்சினார். 'என்ன செய்யலாம்' என்று யோசித்தவருக்கு சட்டென்று சன்னி லியோன் நினைவுக்கு வந்தார். சிவப்பு பிகினி உடையில் உள்ள சன்னி லியோன் படத்துடன், 'ஏய்.. என்னைப் பார்த்து பொறாமைப்படாதீர்கள்' என்று தெலுங்கில் எழுதப்பட்ட வாசகத்துடன் ஃப்ளெக்ஸ் ஒன்றைத் தயார்செய்தார். பின்னர், அதைத் தன் நிலத்தில் வைத்தார்.

இப்போது, அந்தப் பகுதி வழியாகச் செல்பவர்களின் கண்கள் விவசாய நிலத்தின் மீது போவதில்லையாம். எல்லாம் சன்னி லியோன் பார்த்துக்கொள்வதாக செஞ்சு ரெட்டி நம்புகிறார். இதுகுறித்து செஞ்சு ரெட்டி கூறுகையில், 'எனக்கு 10 ஏக்கர் நிலம் உண்டு. நிலத்தின் வழியாகச் செல்பவர்கள் கண்திருஷ்டி படுவதாக எனக்குள் எண்ணம் எழுந்தது. அதனால்தான் இப்படி ஒரு ஃப்ளெக்ஸ் வைத்தேன். இப்போது, என் பயிர்கள்மீது அவர்களின் பார்வை போவ தில்லை' என்கிறார்.

விவசாய நிலங்களில் கண்திருஷ்டி பொம்மையை வைப்பது விவசாயிகளின் வழக்கம். இந்த ஆந்திர விவசாயி, நடிகை சன்னி லியோன் ஃப்ளெக்ஸ் வைத்து மீடியாக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img