img
img

அதிரடி மன்னன் சனத் ஜெயசூர்யாவின் பரிதாப நிலை!
சனி 06 ஜனவரி 2018 19:15:09

img

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மூட்டுப் பகுதியில் ஏற்பட்டக் காயத்தால் நடக்க முடியாமல் தவித்து வருகிறார். 

அதிரடி தொடக்க வீரராக அறியப்பட்ட ஜெயசூர்யா, தான் விளையாடிய காலத்தில் உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர். இலங்கை அணி கடந்த 1996-ல் உலகக் கோப்பை வென்றதில் முக்கிய பங்காற்றிய ஜெயசூர்யா, அந்த அணிக்காக 110 டெஸ்ட், 445 ஒருநாள் போட்டிகள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 14 சதங்கள், 31 அரைசதங்களுடன் 6,973 ரன்களை ஜெயசூர்யா குவித்துள்ளார். அதில், இந்திய அணிக்கெதிராகக் கொழும்புவில் குவித்த 340 ரன்களும் அடங்கும். கடந்த 1997-ல் நடந்த அந்தப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 537 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும்விதமாக விளையாடிய இலங்கை அணி, ஜெயசூர்யாவின் முச்சதத்தின் உதவியுடன் 6 விக்கெட் இழப்புக்கு 952 ரன்கள் என்ற சாதனை ஸ்கோரை எட்டியது. 

ஓய்வுக்குப் பின்னர் இலங்கைக் கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு பதவிகளை அவர் வகித்து வந்தார். இலங்கைக் கிரிக்கெட் வாரியத் தேர்வுக்குழுத் தலைவராகவும் ஜெயசூர்யா பதவி வகித்துள்ளார். கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற காலத்திலேயே அடிக்கடி காயங்களால் அவதியுற்று வந்த ஜெய சூர்யாவுக்கு தற்போது கால் மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஊன்றுகோல் உதவியால் ஜெயசூர்யா நடந்து வருகிறார். ஊன்று கோலுடன் அவர் நடப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக ஆஸ்திரேலி யாவின் மெல்போர்ன் நகருக்கு அவர் விரைவில் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img