img
img

நாடுகடத்தப்படவிருந்த இலங்கை மாணவி செய்த சாதனையால் ஏற்பட்ட அதிர்ஷ்டம்
ஞாயிறு 16 ஜூலை 2017 18:51:30

img

பிரித்தானியாவிலில் குடியுரிமை பெறத் தகுதியற்றவர் என்ற வகையில் நாடுகடத்தப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை மாணவி சிரோமினி சற்குணராஜா தனது பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். பிரித்தானியாவில் Bangor பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடர்ந்த சிரோமினி முதல்தரத்தில் சித்தியடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 3 மாதத்திற்கு முன்னர் அவர் நாட்டைவிட்டு வௌியேறவேண்டி இருந்தாலும் பிரித்தானியாவின் Bangor பல்கலைக் கழகத்தில் மின்னணு பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கான ஒரு வாய்ப்பையும் அதுவரை தங்கியிருப்பதற்கான கால அவகாசத்தையும் அரசிடம் கேட்டிருந்தார். இதனால், சமூக ஆர்வலர்கள் பலரின் முயற்சியில் அவருக்கு இந்த பட்டப்படிப்பை தொடர வாய்ப்பு கிடைத்தது. கடந்த பெப்ரவரி சிரோமினி மற்றும் அவரது தாயாரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்து, இரு நாட்களுக்கு தனிமையில் சிறையில் வைத்தனர். அதன் பின்னர் Bedfordshire பகுதியில் அமைந்துள்ள Yarl's Wood குடிவரவு தடுப்பு மையத்திற்கு அவர்கள் மாற்றப்பட்டனர். குடிவரவு அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிராக 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். தற்போது சிரோமினி வெற்றிகரமாக தனது பட்டப்படிப்பை முதல் தரத்தில் நிறைவு செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3 மாதங்கள் தனது பட்டப் படிப்பை நிறைவு செய்வதற்கு உதவிய அனைவருக்கும் தனது நன்றியை ஷிரோமினி தெரிவித்துள்ளார். "அது ஒரு சவாலான நேரமாக இருந்தது, ஆனால் நல்வாழ்த்துக்களினால் நான் மகிழ்ச்சியடைந்தேன். என்னை சுற்றியிருந்த சமூகம் குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். அடுத்த வாரம் நடைபெறும் எனது பட்டப்படிப்பு விழாவை கொண்டாடுவது குறித்து நான் கவனம் செலுத்துகிறேன், வேலைவாய்ப்பு சந்தையில் Bangor பல்கலைக்கழகத்தில் நான் பெற்று கொண்ட பாடத்திட்டத்தின் மூலம் நான் பெற்றுள்ள திறன்களையும் அறிவையும் பயன்படுத்துவதை நான் எதிர்பார்க் கிறேன்... என சிரோமினி குறிப்பிட்டுள்ளார். 2009ம் ஆண்டு சிரோமினி மற்றும் அவரது தாயார் பிரித்தானியாவுக்கு சென்றனர். பிரித்தானியாவுக்கு சென்ற சிரோமினி அவரது தந்தையின் விசாவில் அங்கு தங்கிருந்த நிலையில், 2011ம் ஆண்டு தந்தை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img