img
img

போக்குவரத்து விதிமுறை மீறல்: வீனஸ் வில்லியம்ஸ் ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் பலி!
வெள்ளி 30 ஜூன் 2017 16:18:27

img

டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் ஏற்படுத்திய கார் விபத்தில் முதியவர் ஒருவர் மரணமடைந்ததால் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. அமெரிக் காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் ஏற்படுத்திய விபத்தால் கடும் சிக்கலில் சிக்கிக்கொண்டுள்ளார். கடந்த 9-ம் தேதி காரில் சென்றுகொண்டிருந்தபோது மற்றொரு காரில் மோதியுள்ளார். இந்த விபத்தில் மற்றொரு காரில் பயணித்த 74 வயது முதியவர் ஒருவர் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த முதியவர் தற்போது சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்துள்ளார். சிகிச்சைபெற்று வந்த முதியவர் மரணமடைந்துள்ளதால் வீனஸ் வில்லியம்ஸுக்கு பிரச்னை அதிகரித்துள்ளது. வீனஸ் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால்தான் விபத்து ஏற்பட்டது என ஃப்ளோரிடா போலீஸார் தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை வீனஸ் வில் லியம்ஸ் தரப்பினர் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.வீனஸ் சாலையில் செல்லும்போது சிவப்பு விளக்கை மதிக்காமல் சென்றுள்ளார் என்றும் கூறப்படு கிறது.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
6ஆவது முறையாக இறுதியாட்டத்தில் கால்பதித்தது அர்ஜெண்டினா!

இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.

மேலும்
img
லியோனல் மெஸ்சி ஓய்வு!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியுடன் தாம் ஓய்வு பெறலாம்

மேலும்
img
கட்டார் உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்க குரோஷியா - மொரோக்கோ மோதல்!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்

மேலும்
img
ஜெர்மனி கோல் காவலர் மரணம்!

வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்

மேலும்
img
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி!

1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img