img
img

தேசிய ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி
சனி 22 ஏப்ரல் 2017 19:21:25

img

தேசிய ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் ஹமேசன்ராஜ், யாஷ்மிதா ஆகியோர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். சிஐஎம்பி அறவாரியத்தின் 12ஆவது ரைசிங் ஸ்டார் தேசிய ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி ஜாலான் டூத்தா ஸ்குவாஷ் அரங்கில் அண்மையில் நடைபெற்றது. நாடு தழுவிய நிலையில் இருந்து 250க்கும் மேற்ப்பட்ட போட்டியாளர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப் படுத்தினர். இப்போட்டியின் ஆண்களுக்கான 13 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்கான இறுதியாட்டத்தில் சிரம்பானை சேர்ந்த ஹமேசன்ராஜ், சரவாக்கைச் சேர்ந்த ஹி ஜியா ரோங்கை சந்தித்து விளையாடினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹமேசன்ராஜ் 11-4, 11-7, 11-4 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்றார். இவ்வாட்டத்தை 27 நிமிடங்களில் முடித்து இவர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.பெண்களுக்கான பிரிவில் சிரம்பானைச் சேர்ந்த யாஷ்மிதா, நூர் மைசாராவை சந்தித்து விளை யாடினார். 45 நிமிடங்களுக்கு நடைபெற்ற இவ்வாட்டத்தில் 7-11, 11-7, 11-8, 8-11, 11-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற யாஷ்மிதா சாம்பியன் பட்டத்தை வாகை சூடினார்.சிரம்பான் மாட்ரிக்ஸ் குளோபல் பள்ளியில் கல்வி பயிலும் ஹமேசன்ராஜ், யாஷ்மிதா ஆகிய இருவரும் முதல் முறையாக தேசிய அளவிலான போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பயிற்சியாளர்கள் வழங்கிய கடுமையான பயிற்சிகள், பெற்றோர்களின் மகத்தான ஆதரவுதான் இப்போட்டியில் எங்களால் சாம்பியன் பட்டம் வெல்ல முடிந்தது என்று அவ்விரு போட்டியாளர்களும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு சிஐஎம்பி குழுமத்தைச் சேர்ந்த அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான், மலேசிய ஸ்குவாஷ் சங்கத்தின் இயக்குநர் மேஜர் எஸ். மணியம், உதவித் தலைவர் நிக் ரஸ்மான், இளையோர் மேம்பாட்டு பிரிவின் தலைவர் ஆன்ட்ரூ முத்து ஆகியோர் பரிசுகளை எடுத்து வழங்கி சிறப்பித்தனர்.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
6ஆவது முறையாக இறுதியாட்டத்தில் கால்பதித்தது அர்ஜெண்டினா!

இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.

மேலும்
img
லியோனல் மெஸ்சி ஓய்வு!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியுடன் தாம் ஓய்வு பெறலாம்

மேலும்
img
கட்டார் உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்க குரோஷியா - மொரோக்கோ மோதல்!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்

மேலும்
img
ஜெர்மனி கோல் காவலர் மரணம்!

வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்

மேலும்
img
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி!

1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img