img
img

விளம்பர வருவாயில் டோணியை முந்திய பி.வி.சிந்து
திங்கள் 27 மார்ச் 2017 16:48:56

img

விளம்பர வருவாயை பொறுத்தளவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோணியை விடவும், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து முன்னிலை பெற்றுள்ளார். ஆண்கள் ஆதிக்கம் கொண்ட இந்திய விளையாட்டு துறையில், கிரிக்கெட்டை தாண்டி ஒரு துறையில், பெண்மணியாக இருந்து கொண்டு சிந்து இந்த சாதனையை படைத்துள்ளார். அண்மையில் நிறைவடைந்த ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் பிரிவு பேட்மிண்டனில் வெள்ளி பதக்கத்தை வென்ற பிறகு சிந்து மீதான மதிப்பு விளம் பரதாரர்கள் மத்தியில் எகிறியுள்ளது. தற்போது இந்திய விளையாட்டுத்துறை பிரபலங்களில் கோஹ்லி நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் ரூ.2 கோடி சம்பாதித்து வருகிறார். இந்த சாதனையின் மிக அருகாமைக்கு சென்றுள்ளார் சிந்து. 21 வயதாகும் சிந்து நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.1 முதல் 1.25 கோடி வரை சம்பாத்தியம் செய்கிறார். டோணி தனது உச்சபட்ச நிலையில் இருந்த போது பெற்றதைவிட இது அதிக ஊதியமாகும். ஒலிம்பிக்கில் சில்வர் மெடல் வாங்கும்வரை சிந்துவின் விளம்பர மார்க்கெட் ரேட், ரூ.15-25 லட்சமாக இருந்தது. ஆனால், வெள்ளி பதக்கம் பெற்றதுமே விளம்பர வருவாய் தாறுமாறாக உயர்ந்துவிட்டது. கடந்த 5 மாதங்களில் சிந்து ரூ.30 கோடி அளவுக்கு விளம்பர ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். கிரிக்கெட் மற்றும் பாலிவுட் நடிகர், நடிகைகளே கோலோச்சிய விளம்பர துறையில் பெண்கள் பேட்மிண்டன் துறையிலிருந்து சிந்து புகழ் பெற்றுள்ளது கவனிக்கத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
6ஆவது முறையாக இறுதியாட்டத்தில் கால்பதித்தது அர்ஜெண்டினா!

இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.

மேலும்
img
லியோனல் மெஸ்சி ஓய்வு!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியுடன் தாம் ஓய்வு பெறலாம்

மேலும்
img
கட்டார் உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்க குரோஷியா - மொரோக்கோ மோதல்!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்

மேலும்
img
ஜெர்மனி கோல் காவலர் மரணம்!

வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்

மேலும்
img
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி!

1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img